இந்தியா
null

ஆற்றில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு.. ராஜஸ்தானில் சோகம்

Published On 2025-06-11 04:03 IST   |   Update On 2025-06-11 04:05:00 IST
  • பிறந்தநாளை கொண்டாட ஆற்றுக்கு அருகே வந்துள்ளனர்.
  • அவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கினர்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் நேற்று, 25 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் இருந்து வந்த 11 இளைஞர்கள், அவர்களில் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட ஆற்றுக்கு அருகே வந்துள்ளனர்.

அவர்களில் சிலர் குளிக்க ஆற்றில் இறங்கியபோது ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியஅவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியபோது, அவர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

மீட்கப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News