இந்தியா

திறந்தவெளியில் விருது வழங்கும் விழா- வெயிலின் தாக்கத்தால் 11 பேர் சுருண்டு விழுந்து பலி

Published On 2023-04-16 20:33 GMT   |   Update On 2023-04-16 21:34 GMT
  • நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
  • சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

கோடைக்காலம் தொடங்கிய நிலையில், நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.

நவி மும்பையில் உள்ள ஒரு பெரிய மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடந்தது.

இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே கூறுகையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

மருத்துவர்களிடமிருந்து பெறப்பட்ட விளக்கத்தின்படி, இன்று (நேற்று) 7-8 பேர் இறந்துள்ளனர். சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வெயிலால் ஏற்பட்ட பாதிப்பு. முதன்மை சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.

Tags:    

Similar News