இந்தியா

ஜார்க்கண்ட் கனமழை: மின்னல் தாக்கி, நீரில் மூழ்கி 7 பேர் பலி

Published On 2025-05-21 00:38 IST   |   Update On 2025-05-21 00:38:00 IST
  • பொகாரோ மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர்.
  • நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் கனமழை மற்றும் பலமான காற்றுடன் கூடிய மின்னல் தாக்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளானது.

மாவட்டத்தின் இரு பகுதிகளில் பெய்த கனமழையின் போது நீரில் மூழ்கி 5 பேரும், 2 பேர் மின்னல் தாக்கியும் உயிரிழந்தனர்.

சந்தன்கியாரி பகுதியில் உள்ள கம்ஹாரியா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் குளித்தபோது ஒரு பெண் மற்றும் அவரது 2 மகள்கள் உள்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மின்னல் தாக்கி ஒரு விவசாயி மற்றும் 7 வயது சிறுமி உயிரிழந்தனர். மழை தொடர்பான இறப்புகளில் 7 பேர் பலியாகினர் என அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News