இந்தியா

குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Published On 2023-01-17 06:20 IST   |   Update On 2023-01-17 06:20:00 IST
  • குஜராத் மாநிலத்தில் உத்தராயண பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
  • அப்போது காற்றாடிகளின் நூல் கழுத்தை அறுத்ததில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர்.

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டி உத்தராயண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண காற்றாடிகளைப் பறக்கவிட்டு குதூகலிப்பது வழக்கம். இந்த வழக்கத்தால் சில அப்பாவிகளின் உயிர் அநியாயமாக பறிபோய்விடுகிறது. காற்றாடிகளின் மாஞ்சா நூல், சிலரின் கழுத்தை அறுத்து பலிவாங்கிவிடுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கீர்த்தி என்ற 2 வயது சிறுமியின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

விஸ்நகரில் தனது தாயுடன் தெருவில் நடந்து சென்ற கிஸ்மத் என்ற 3 வயது பெண்குழந்தை காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ராஜ்கோட் நகரில் ரிஷப் வர்மா என்ற 7 வயது சிறுவன் காற்றாடி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான்.

இதேபோல வதோதரா, கட்ச், காந்திநகர் மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டு செத்தனர். காற்றாடி நூலால் மேலும் 130 பேர் காயமடைந்தனர்.

Tags:    

Similar News