இந்தியா

ஆந்திராவில் கின்னஸ் சாதனைக்காக 5 லட்சம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி

Published On 2025-05-31 20:53 IST   |   Update On 2025-05-31 20:53:00 IST
  • ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.
  • யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நடைபெறுகிறது.

இதில் அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

கின்னஸ் சாதனைக்காக இந்த யோகாசனம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தலைமை செயலாளர் கிருஷ்ணா பாபு கூறுகையில்:-

ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

அவர்களுக்கு மாநில அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News