இந்தியா

நடப்பாண்டில் 5 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம்- முந்தைய ஆண்டைவிட 43 சதவீதம் அதிகம்

Published On 2023-05-24 03:23 GMT   |   Update On 2023-05-24 03:23 GMT
  • 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் சேவை அதிகரித்துள்ளது.
  • கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47 சதவீத அளவுக்கே ரத்து செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி:

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவுகளின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் 3 கோடியே 53 லட்சம் பேர் பயணித்து இருந்தனர்.

மேலும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் சேவை அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47 சதவீத அளவுக்கே ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதைப்போல பயணிகளின் புகார் எண்ணிக்கையும் 10 ஆயிரம் பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

Tags:    

Similar News