இந்தியா

சமூக வலைத்தள பழக்கத்தால் பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி: கல்லூரி நிகழ்ச்சியால் வெளியான அதிர்ச்சி சம்பவம்

Published On 2024-09-27 09:39 IST   |   Update On 2024-09-27 11:10:00 IST
  • 4 பேருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகிய மாணவிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவிக்கு சமூக வலைத்தளம் மூலம் 4 பேர் நட்பாகி உள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களால் பயன்கள் இருந்தாலும், பெரும்பாலும் குற்றச்சம்பவங்களே அதிகம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் வெளியாகும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களே சார்ந்து உள்ளது.

அப்படி ஒரு சம்பவம்தான் புனேவில் நடந்துள்ளது. 4 பேருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகிய மாணவிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நான்கு பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள்.

கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிகழ்வின் போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவிக்கு சமூக வலைத்தளம் மூலம் 4 பேர் நட்பாகி உள்ளனர். இதன் காரணமாக 4 பேரும் வெவ்வேறு இடங்களில் மாணவியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் சிறார்கள் என்பதால் அவர்களை பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. மேலும் மற்ற 2 பேர் (வயது 20 முதல் 22 வயது வரை) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News