ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை- 9 நாட்களுக்கு பிறகு மீட்ட நிலையில் உயிரிழப்பு
- பெண் குழந்தை எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 150 அடி ஆழத்தில் சிக்கியது.
- ஆழ்துளை கிணறு அருகே 12 அடி வரை சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 170 அடி ஆழத்தில் சிக்கியது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வந்தனர்.
டெல்லில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே 12 அடி வரை சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீட்பு குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை 10வது நாளான இன்று மீட்டனர்.
கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் குழந்தையை மீட்டனர்.
பின்னர் அங்கு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறுது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.