இந்தியா

பீகாரில் இருதரப்பினருக்கு இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பேர் உயிரிழப்பு- 2 பேர் படுகாயம்

Published On 2025-05-24 18:08 IST   |   Update On 2025-05-24 18:08:00 IST
  • காலை 5 மணிக்கு தகராறில் ஏற்பட்டு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
  • ஐந்து பேர் மீது குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், 3 பேர் உயிரிழப்பு.

பீகார் மாநிலத்தில் அற்ப காரணத்திற்காக ஏற்பட்ட தகராறு, துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. இதில் 3 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பக்சர் மாவட்டம் அஹியாபூர் கிராமத்தில் இன்று காலை 5 மணிக்கு இரு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. தகராறு அதிகரிக்க இரு பிரிவினரும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது ஐந்து பேர் குண்டு பாய்ந்து சரிந்து கிடந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயத்துடன் இரண்டு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. காலை 5 மணிக்கு இரு பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Tags:    

Similar News