இந்தியா

40 மணிநேர போக்குவரத்து நெரிசலில் 3 பேர் பலி.. "ஏன் வெளியே வருகிறார்கள்" என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம்

Published On 2025-07-02 03:30 IST   |   Update On 2025-07-02 03:31:00 IST
  • இந்த நெரிசலில் 4000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சிக்கித் தவித்தன.
  • "வேலையில்லாமல் ஏன் மக்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்?" என்று அலட்சியமாக கேள்வி எழுப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர்-தேவாஸ் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட 40 மணி நேர போக்குவரத்து நெரிசலால் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த நெரிசலில் 4000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சிக்கித் தவித்தன.

இந்த நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தேவாஸ் வழக்கறிஞர் ஆனந்த் அதிகாரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இது குறித்து உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வழக்கறிஞர், "வேலையில்லாமல் ஏன் மக்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்?" என்று அலட்சியமாக கேள்வி எழுப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றம் இந்த கருத்தை கடுமையாக கண்டித்தது. கடந்த செப்டம்பரிலேயே மாற்றுச் சாலையை நான்கு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டும், அது இன்னும் நிறைவடையவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த விவகாரம் தொடர்பாக NHAI, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுங்கச்சாவடி நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 7 அன்று நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News