இந்தியா
உலக சாதனை முயற்சி - தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டம்
- அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
- சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 9-ம் ஆண்டு தீபோற்சவத்துக்காக சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.
அயோத்தி மாவட்டத்தில் உள்ள ராம்மனோகர் லோஹியா அவாத் பல்கலைக்கழக மாணவர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை உலக சாதனை முயற்சியாக சுமார் 28 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட உள்ளதாகவும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.