கட்டண தகராறில் பயணியை கொலை செய்த டிரைவர்: 24 வருடத்திற்குப் பிறகு கைது செய்த போலீசார்
- 2001-ல் கொலை செய்யப்பட்ட நிலையில் வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
- கடந்த 5 மாதங்களுக்கு முன் தூசி தட்டி மீண்டும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கை தூசி தட்டி, விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹருண் அலி முஷ்டாகின் அலி சயத் (வயது 43) என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வந்துள்ளார். இவரது ஆட்டோ ரிக்ஷாவில் மொஹரம் அலி முகமது இப்ராஹிம் அலி (56) என்பவர் சவாரி செய்துள்ளார். அப்போது கட்டண தகராறு ஏற்பட ஹருண் அலி, மொஹரம் அலியை குத்திக் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவு ஆனார். சில நாட்கள் கழித்து போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இந்த வழக்கை தூசி தட்டி மீண்டு விசாரணைக்கு போலீசார் எடுத்துக் கொண்டனர். உயிரிழந்தவர்களின் சொந்தக்காரர்கள் மற்றும் பழைய சாட்சிகளை மீண்டும் சந்தத்து ஆதாரங்களை திரட்டினர்.
அதனடிப்பைடையில் மொஹரன் அலி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் மொஹரம் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மொஹரம் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.