இந்தியா

21 நாட்கள் தேடுதல் வேட்டை.. 16 பெண்கள் உட்பட 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

Published On 2025-05-15 00:51 IST   |   Update On 2025-05-15 00:51:00 IST
  • கொல்லபட்ட மாவோயிஸ்டுகள் தலைகளுக்கு மொத்தம் 1.72 கோடி ரூபாய் பரிசுத்தொகை இருந்தது.
  • இந்த நடவடிக்கையின்போது 18 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

உசுரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரேகுட்டாவில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சிஆர்பிஎஃப் டிஜி ஜிபி சிங் மற்றும் சத்தீஸ்கர் டிஜிபி அருண்தேவ் கவுதம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

சுமார் 21 நாட்கள் நீடித்த இந்த  தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட 31 மாவோயிஸ்டுகளில் 16 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லபட்ட மாவோயிஸ்டுகள் தலைகளுக்கு மொத்தம் 1.72 கோடி ரூபாய் பரிசுத்தொகை இருந்தது. இந்த நடவடிக்கையின்போது 18 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவிதித்தனர். சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் 35 அதிநவீன ஆயுதங்களையும் மீட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

Similar News