இந்தியா
கோப்புப் படம்

ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்புப் படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Update: 2022-05-28 13:12 GMT
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளூர் போலீசார், பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News