இந்தியா
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த அர்ஜுன் சிங்

கொல்கத்தாவில் பரபரப்பு - திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்.பி.

Update: 2022-05-22 21:38 GMT
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் பாரக்புரா தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த அர்ஜூன் சிங். இவர் முதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு அர்ஜுன் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பின், அவர் பாரக்புரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.யான அர்ஜூன் சிங் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன், அர்ஜுன் சிங் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

Tags:    

Similar News