இந்தியா
பிரதமர் மோடி

தேர்தலில் வெற்றி பெற்ற அந்தோனி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2022-05-22 00:04 GMT
ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சி தலைவரான ஸ்காட் மாரிசனை வீழ்த்தி அந்தோனி அல்பானீஸ் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசனை வீழ்த்தி தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி ஆல்பனீஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட அந்தோனி அல்பானீஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட முன்னுரிமைகளுடனும் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News