என் மலர்

  இந்தியா

  ராஜ்நாத் சிங், விமானம்
  X
  ராஜ்நாத் சிங், விமானம்

  பாதுகாப்புத்துறை மந்திரி வந்த விமானம், ஆக்ராவிற்கு திருப்பி விடப்பட்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் விமானம் உள்பட 11 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக பல்வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் நேற்று மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு வந்த 11 விமானங்கள் அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் ஆக்ராவுக்கு திரும்பி விடப்பட்டன. 

  இதில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பயணம் செய்த விமானமும் அடங்கும் என்று டெல்லி விமான போக்குவரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

   குஜராத்தின் வதோதராவில் உள்ள ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார், 

  மோசமான வானிலை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய அவரது விமானம் ஆக்ராவிற்கு திரும்பி விடப்பட்டது.

  Next Story
  ×