இந்தியா
சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் விலகல்

Update: 2022-05-14 10:22 GMT
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் கட்சியில் இருந்து விலகினார்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், முன்னாள் முதல் - மந்திரி சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்தார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக,  கட்சி தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நோட்டீஸ் அனுப்பப்பட்டு சில வாரங்களுக்கு பின்னர் இன்று அவர் கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர், பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய சுனில் ஜாகர்  “குட் பை அண்ட் குட்லக் காங்கிரஸ்” என்று கூறி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்த கட்சியினரை கடுமையாக விமர்சித்தார். 
Tags:    

Similar News