இந்தியா
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசின் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2022-05-03 11:27 GMT   |   Update On 2022-05-03 12:09 GMT
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 189 கோடியே 41 லட்சத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,568 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 84 ஆயிரத்து 913 ஆக உயர்ந்தது.

டெல்லியில் 1,076 பேர், அரியானாவில் 439, கேரளாவில் 250, உத்தர பிரதேசத்தில் 193, கர்நாடகாவில் 111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,889 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 41 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பகவான் மகாவீர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசின் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News