இந்தியா
ஒலிபெருக்கி

வழிபாட்டு தலங்களில் 54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றம் - உ.பி. அரசு நடவடிக்கை

Published On 2022-05-01 15:50 IST   |   Update On 2022-05-01 15:50:00 IST
மகாராஷ்டிராவில் மசூதிகளில் வைத்துள்ள ஒலிபெருக்கியை மே 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வைக்கப் பட்டிருந்த 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு உள்ளன என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

Similar News