இந்தியா
பி.எஸ் ராஜூ

ராணுவ துணை தலைமை தளபதி நாளை பொறுப்பேற்பு

Published On 2022-04-30 11:07 IST   |   Update On 2022-04-30 11:07:00 IST
பொறியாளர்கள் பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ராணுவப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்படும் முதல் நபர் பி.எஸ் ராஜூ ஆவார்.
புதுடெல்லி:

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம்.நரவனேவின் பதவிக் காலம் இன்று நிறைவடைகிறது. இதையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நாளை பொறுப்பேற்ற உள்ளார். .

இந்நிலையில், ராணுவத்தின் புதிய துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் நாளை பொறுப்பேற்கவுள்ளார். 

பி.எஸ் ராஜூ பீஜப்பூா் சைனிக் பள்ளியில் பயின்றவர். மேலும் தேசிய பாதுகாப்பு அகாடெமியில் பயிற்சி பெற்றவா். ஜேஏடி படைப் பிரிவில் 1984-ஆம் ஆண்டு அவா் இணைக்கப்பட்டாா். தனது 38 ஆண்டு ராணுவ சேவையில், பல்வேறு படைப் பிரிவுகளுக்கு அவா் தலைமை வகித்துள்ளாா். 

பயிற்சி பெற்ற ஹெலிகாப்டா் விமானியான பி.எஸ்.ராஜூ, தற்போது ராணுவ செயல்பாடுகள் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா். சீனாவுடன் பதற்ற சூழல் நிலவும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளின் ஒட்டுமொத்த தயாா்நிலையை அவரே மேற்பாா்வையிட்டாா்.

பொறியாளர்கள் பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ராணுவப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்படும் முதல் நபர் பி.எஸ் ராஜூ ஆவார். 

Similar News