இந்தியா
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
சீக்கிய குருக்கள் தங்களின் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்து உள்ளனர், தேசத்தை ஒன்றாக்க பாடுபட்டுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் சீக்கிய குழுவினர் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற சீக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற டர்பன் அணிந்து கலந்துகொண்டார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களை நான் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். கனடா நாட்டின் இந்திய தூதுவர்களாக சீக்கியர்கள் உள்ளனர்.
சீக்கிய குருக்கள் தங்களின் முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்து இருக்கின்றனர். தேசத்தை ஒன்றாக்க பாடுபட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திரத்துக்காகவும், சுதந்திரத்துக்கு பின்னரும் சீக்கிய சமுதாயம் ஆற்றிய பங்கிற்கு இந்தியா நன்றிக்கடன் பட்டுள்ளது.
கொரோனா பரவல் நேரத்தில் இந்தியா அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என சிலர் நினைத்தனர். ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக உள்ளது.
தொழில் வளர்ச்சியில் இந்தியா உலகிலேயே தனித்துவத்தைப் பெற்றுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- உ.பி மந்திரி ஆவேசம்