இந்தியா
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா

பா.ஜ.கவின் சதி வலைக்குள் விழாதீர்கள்: டெல்லி துணை முதல்வர்

Published On 2022-04-15 16:11 IST   |   Update On 2022-04-15 16:11:00 IST
இந்த முறை தேர்தலில் தொற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக பல்வேறு இலவசங்களை அறிவித்து வருகிறது என மணிஷ் சிசோடியா கூறினார்.
பாஜகவின் சதிவலைக்குள் விழாமல் இமாச்சல பிரதேச மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாகளிக்க வேண்டும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு பிற்பகுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வரும் பாஜக அரசு பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:-

இமாச்சல பிரதேச மக்கள் பாஜகாவின் சதி வலைக்குள் விழுந்து ஏமாறக்கூடாது. இந்த முறை தேர்தலில் தொற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக பல்வேறு இலவசங்களை அறிவித்து வருகிறது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களிடம் இருந்து இலவசங்களை பிடுங்கி விடும். மின்சாரம், பேருந்து கட்டணங்கள் உயரும். மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை தருவது பாஜகவின் கொள்கையில் கிடையாது. அதனால் உண்மையான வளர்ச்சியை காண மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

Similar News