இந்தியா
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

Published On 2022-04-05 14:19 GMT   |   Update On 2022-04-05 14:19 GMT
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தனது மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினார்.
புதுடெல்லி:

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

அப்போது, போலவரம் பாசனத் திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.55,000 கோடி உள்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள ஒதுக்கீடுகளுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என கோரினார்.

​​மேலும், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்-2014 ன் பல விதிகள் இன்னும் செயல்படுத்தப்படாதது குறித்து பிரதமரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு சென்றார்.

தனது மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பிய முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா மற்றும் ஆந்திரா இடையே ஜூன் 2014ல் மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து நிலுவையில் உள்ள மின்சார பாக்கிகள் தொடர்பான சர்ச்சையை தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்...வேலைக்கு சென்ற வீட்டில் குழந்தைகளை சித்ரவதை செய்த மூதாட்டி- காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா
Tags:    

Similar News