இந்தியா
அகமதாபாத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான்

டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து குஜராத் மீது கவனம் திருப்பும் ஆம் ஆத்மி

Published On 2022-04-02 10:09 IST   |   Update On 2022-04-02 10:09:00 IST
டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் ஆபார வெற்றிப் பெற்றது. கோவாவிலும் ஆம் ஆத்மி காலூன்றியது. இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி தனது கவனத்தை குஜராத் மீது திருப்பியுள்ளது.

குஜராத்தில் 1995-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி குஜராத்தில் காலூன்ற முயன்று வருகிறது. இதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக அகமதாபாத் சென்றுள்ளனர்.

அகமதாபாத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்கின்றனர். அதன்படி, குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கின்றனர். பின்னர் 'திரங்கா யாத்ரா' என்கிற சாலை பேரணி நடத்துகின்றனர். நாளை அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயணன் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

Similar News