இந்தியா
பிரதமர் மோடி

இந்தியாவில் அதிகாரமிக்க தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

Published On 2022-04-01 05:32 GMT   |   Update On 2022-04-01 05:32 GMT
இந்தியாவின் அதிகாரமிக்க 100 தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் பட்டியலை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி முதல் இடத்தில் உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் 3 புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவின் அதிகாரமிக்க 100 தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் பட்டியலை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி முதல் இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருப்பது, உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டது, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தி இருப்பதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் மத்திய மந்திரி அமித்ஷா 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளார். 4-வது இடத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இருக்கிறார். 5-வது இடத்தில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார்.

இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 13-வது இடத்தில் இருந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளனர்.

Tags:    

Similar News