இந்தியா
எம்.எல்.ஏ. பிரசாந்த் ஜாதவ்

ஒடிசா: கூட்டத்தில் காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

Published On 2022-03-23 05:45 GMT   |   Update On 2022-03-23 05:45 GMT
கூட்டத்தில் காரை ஏற்றி 22 பேரை படுகாயமடையச் செய்த ஒடிசா மாநில பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பிரசாந்த் ஜாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. பிரசாந்த் ஜாதவ். இவரது கார் கடந்த 12-ந்தேதி கோர்தாவில் உள்ள பனாபூர் என்ற இடத்தில் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இந்த விபத்தில்  22 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 10 போலீஸ்காரர்கள்.

விபத்து ஏற்படுத்திய பிரசாந்த் ஜாதவ்  கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கூட்டத்தில் கார் புகுந்த நிலையில், கோபமடைந்த மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் பிரசாந்த் ஜாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 2-ந்தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் அனுப்ப உத்தரவிட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News