இந்தியா
கொரோனா வைரஸ்

இந்தியாவில் புதிதாக 1,778 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு

Published On 2022-03-23 03:57 GMT   |   Update On 2022-03-23 03:57 GMT
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 2,542 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 57 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. அதேநேரம் புதிய பாதிப்பு நேற்றை விட சற்று உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 21-ந் தேதி பாதிப்பு 1,549 ஆக இருந்த நிலையில் நேற்று 1,581 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

கேரளாவில் ஒருநாள் பாதிப்பு நேற்றுமுன்தினம் 495-ல் இருந்தது. அங்கு நேற்று பாதிப்பு 702 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 62 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 52 அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5,16,605 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 2,542 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 57 ஆக உயர்ந்தது.

தற்போது 23,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 826 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 30,53,897 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 181 கோடியே 89 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 6,77,218 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.42 கோடியாக உயர்ந்துள்ளது.



Tags:    

Similar News