இந்தியா
சித்து

பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கு சறுக்கல்- மாநில தலைவர் சித்து பின்னடைவு

Update: 2022-03-10 05:38 GMT
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா ஆகியோர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் இருந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த கட்சியின் 13 வேட்பாளர்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தனர்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா ஆகியோர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி மஜிதியாவை விட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜீவன்ஜோதி கவுர் 3000க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருந்தார். சித்து மூன்றாவது இடத்தில் இருந்தார்.
Tags:    

Similar News