இந்தியா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா

தேர்தல் போரில் காங்கிரஸ் கடுமையாக போராடியது- காத்திருந்து முடிவுகளைப் பார்ப்போம்: பிரியங்கா காந்தி

Published On 2022-03-08 10:01 GMT   |   Update On 2022-03-08 12:45 GMT
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உ.பி தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை கொண்டாடும்விதமாக லக்னோவில் இன்று பேரணி நடைபெற்றது.
உத்தர பிரதேசம் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலுக்கான கடைசி வாக்குப்பதிவு கடந்த 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே பல்வேறு நிறுவனங்களின் கீழ் தேர்தல் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டது. இதில், 403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி சட்டசபையில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பெரும்பாண்மையுடன் வெற்றிப்பெறும் என்றும்,  காங்கிரஸ் மொத்தம் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உ.பி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை கொண்டாடும்விதமாக லக்னோவில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா கலந்துக் கொண்டார்.

பின்னர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நமது 159 பெண் வேட்பாளர்களையும் கொண்டாடுவதற்காக இன்று லக்னோவில் பேரணி நடத்தப்பட்டது. இது பெரிய விஷயமாக நான் நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் தேர்தலில் பேராராடியயது பெரிய விஷயமாக நினைக்கிறேன். நாம் அவர்களைக் கொண்டாட வேண்டும். உ.பி சட்டசபை தேர்தல் போரில் காங்கிரஸ் கடுமையாக போராடியது. நாம் காத்திருந்து முடிவுகளைப் பார்ப்போம்.  

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. கோவாவில் தொங்கு சட்டசபை: கருத்துக் கணிப்பால் கணக்குப்போடும் பா.ஜனதா- காங்கிரஸ்
Tags:    

Similar News