இந்தியா
பாலியல் தொல்லை

9 வயது மாணவியை கற்பழித்த 71 வயது பள்ளி முதல்வர் சிறையில் அடைப்பு

Published On 2022-03-05 13:32 IST   |   Update On 2022-03-05 13:32:00 IST
உத்தரபிரதேசத்தில் பள்ளி முதல்வர் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
முசாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவியை, 71 வயதான பள்ளி முதல்வர் கற்பழித்தார்.

சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது மிகுந்த பயத்துடன் காணப்பட்டார். அவரிடம் தாயார் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஆனந்த் தேவ் மிஸ்ரா கூறியதாவது:-

சம்பவத்தன்று அந்த மாணவியை பள்ளி முதல்வர் ஏதோ காரணம் சொல்லி தனது அறைக்கு அழைத்துள்ளார். பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்ற விவரங்களை மறைத்ததாக மற்றொரு ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News