இந்தியா
நீங்களும் இதைபோன்று அழைத்துச் செல்லப்படுவீர்கள்: சஞ்சய் ராவத் எச்சரிக்கை
மகாராஷ்டிர மாநில மந்திரியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், சிவ சேனா கட்சியின் சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவ சேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மாநில அரசுக்கு பா.ஜனதா மத்திய அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுத்து வருவதாக மூன்று கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில மந்திரியான நவாப் மாலிக் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவரை விசாரணைக்காக அலுவலகம் வரை வரும்படி அழைத்துச் சென்றனர். இது மகாராஷ்டிர மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதகுறித்து சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘நவாப் மாலிக் மூத்த தலைவர். மகாராஷ்டிர மாநிலத்தில் கேபினட் மந்திரியாக உள்ளார். அமலாக்கத்துறை அவரை அழைத்துச் சென்ற விதம் மகாராஷ்டிர மாநில அரசுக்கு சவாலானது.
மத்திய அமைப்புகளால் அமைச்சர் வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். 2024-க்குப் பிறகு உங்களுக்கும் இதே நிலை ஏற்படும். மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டு விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்... எதிர்க்கட்சி தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது: பசவராஜ் பொம்மை விமர்சனம்