இந்தியா
கோப்புப்படம்

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 4-ந்தேதி வரை ஒத்திவைப்பு

Published On 2022-02-22 07:50 GMT   |   Update On 2022-02-22 07:50 GMT
கர்நாடக மாநில மந்திரி கே.எஸ். ஈஸ்வரப்பாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வற்புறுத்தியது. அவரை நீக்கும்வரை சட்டசபையில் இருந்து வெளியேறமாட்டோம் என காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிவித்தனர். இரவு முழுவதும் சட்டசபைக்குள்ளேயே தூங்கினர்.



தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் சட்டசபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News