இந்தியா
மனைவியுடன் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க. ஓரங்கட்டப்படும்- அகிலேஷ் யாதவ்

Published On 2022-02-20 11:06 GMT   |   Update On 2022-02-20 11:06 GMT
இதுவரை நடந்த 2 கட்ட தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி உறுதியானதாக அகிலேஷ் யாதவ் கூறினார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

இந்நிலையில் கர்ஹால் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தன் மனைவியுடன் ஜஸ்வந்த் நகரில் ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தர பிரதேச தேர்தல் மூலம் பாஜக ஓரங்கட்டப்படும் என்றும், பாஜகவை விவசாயிகள் மன்னிக்க மட்டார்கள் என்றும் கூறினார்.

இதுவரை நடந்த 2 கட்ட தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி உறுதியானதாகவும் அவர் கூறினார்.

பெண் காவலர் ஒருவர் கடத்தப்பட்டு வாய்க்காலில் இறந்து கிடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக கூறினார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Tags:    

Similar News