இந்தியா
ஆப்கன் சீக்கியர்களை சந்தித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் சந்திப்பு

Published On 2022-02-20 06:15 IST   |   Update On 2022-02-20 06:15:00 IST
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட வன்முறையால் அங்கிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த சீக்கியர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். 

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

Similar News