இந்தியா
பிரதமர் மோடி

அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Published On 2022-02-14 09:01 IST   |   Update On 2022-02-14 09:01:00 IST
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:

கோவா, உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
 
கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Similar News