இந்தியா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மூத்த குடிமக்களுக்கான இலவச ரெயில் புனித யாத்திரை மீண்டும் தொடக்கம்

Published On 2022-02-08 09:15 GMT   |   Update On 2022-02-08 09:15 GMT
கொரோனா தொற்று காரணமாக இலவச யாத்திரை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கப்படுகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 'முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா' என்கிற இலவச புனித யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அன்று டெல்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக யாத்திரை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டம் தொடங்கப்படுகிறது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரயில் புனித யாத்திரை மையங்களான துவாரகா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு முறையே பிப்ரவரி 14-ம் தேதி மற்றும் 18-ம் தேதி ஆகிய தேதிகளில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. அகமதபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள்- குஜராத் கோர்ட்டு தீர்ப்பு
Tags:    

Similar News