இந்தியா
மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங்

இன்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் : மத்திய அரசு தகவல்

Published On 2022-02-06 20:23 GMT   |   Update On 2022-02-06 20:23 GMT
கொரோனா தொற்று குறைந்து வருவதால் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளதாக மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் பிப்ரவரி 15 வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு இதற்கு முன்பு அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், கொரோனா பெருந்தொற்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர், குறைந்து வரும் கொரோனா  தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முழு அளவிலான பணியாளர்களோடு அலுவலகங்கள் இன்று முதல் இயங்க முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.  

அனைத்து மட்டங்களில் எந்த விதிவிலக்கும் இல்லாமல் அலுவலகங்களுக்கு பணியாளர்கள் நேரில் வரவேண்டும் என்றும் அவர் கூறினார். 

அதே வேளையில் அனைத்துப் பணியாளர்களும் அனைத்து நேரங்களிலும் முக கவசங்கள் அணிந்திருப்பதையும் சரியான கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதையும் துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News