இந்தியா
ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.

சித்தூர் அருகே ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த 3 பேர் கைது

Published On 2022-02-02 11:58 IST   |   Update On 2022-02-02 11:58:00 IST
சித்தூர் அருகே ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள ரங்கராஜபுரம் மண்டல வளர்ச்சி அலுவலகம் முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 14-ந்தேதி இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.

இதுகுறித்து ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ரங்கராஜபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் புத்தூர் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி சிலையை சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்டனர்.

அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த சாந்த ஸ்வரூப் (வயது26), ஹேமாத்திரி (20), பெங்களூரை சேர்ந்த அசோக் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். சிலையை சேதப்படுத்த பயன்படுத்திய கத்தி மற்றும் செல்போன்கள், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News