இந்தியா
அபினந்தன் பதக்

உ.பி. தேர்தல் - பிரதமர் மோடியின் தோற்றம் கொண்ட அபினந்தன் பதக் சுயேட்சையாக போட்டி

Published On 2022-02-02 06:45 IST   |   Update On 2022-02-02 06:45:00 IST
உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
லக்னோ:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அபினந்தன் பதக் (56). பிரதமர் நரேந்திர மோடியை போன்ற உருவ ஒற்றுமை உடையவர்.

பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் லக்னோ தொகுதியில் போட்டியிட அபினந்தன் பதக் முடிவு செய்தார். ஆனால், அவரது கோரிக்கையை பா.ஜ.க. தலைமை நிராகரித்துள்ளது.

இதையடுத்து, லக்னோவில் உள்ள சரோஜினி நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அபினந்தன் பதக் கூறியதாவது: 

நான் ஒரு மோடி பக்தன். பா.ஜ.க. என்னைப் புறக்கணிக்கலாம். யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல் மந்திரியாக வருவதற்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். மோடியும் யோகியும் ஒரு நாணயத்தின் இரு முகங்கள். வெகுஜனங்களுக்காக தன்னலமின்றி உழைக்கும் அவர்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.

பொருளாதார ரீதியாக என்னால் எனது மனைவி மீரா பதக்கை ஆதரிக்க முடியவில்லை. எனக்கு 3 மகள்கள் உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். இருவரைத் தவிர, மீதமுள்ளவர்கள் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். எனது மனைவி இரு மகன்களுடன் வசித்து வருகிறார். நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு என் மனைவி என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் அரசியல்வாதியாகி சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கையைச் சமாளிக்க அபினந்தன் பதக் ரெயில்களில் வெள்ளரிகளை விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News