இந்தியா
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகளை அமைக்க திட்டம் - மத்திய பட்ஜெட்டில் தகவல்

Published On 2022-02-01 12:21 IST   |   Update On 2022-02-01 12:21:00 IST
இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும் என்று மத்திய நிதிமந்திரி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற 
மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகளை அமைக்கும். 

சிப் இணைக்கப்பட்ட இ-பாஸ்போர்ட்கள் வெளியிடப்படும்.

நகர்ப்புற திட்டமிடலுக்காக உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

அடுத்த கட்டமாக எளிதாக தொழில் செய்ய நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

இந்தியாவில் உள்ள அனைத்து 1.5 லட்சம் தபால் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும்.

இது நிதி வைப்பு மற்றும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஏ.டி.எம்.கள் மூலம் கணக்குகளை கையாள உதவும்.

தபால் அலுவலக வங்கி கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை ஆன்லைன் மூலம் பெற முடியும்.

குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

தற்போது, ​​தபால் நிலையங்கள், இந்தியா போஸ்டல் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் சேமிப்பு கணக்கு சேவைகள் மற்றும் பேமெண்ட் வங்கி சேவைகளை வழங்குகின்றன.

இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News