இந்தியா
நிர்மலா சீதாராமன்

தொலைபேசி மூலம் கவுன்சிலிங் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்- நிர்மலா சீதாராமன்

Published On 2022-02-01 06:19 GMT   |   Update On 2022-02-01 06:57 GMT
இதற்காக 23 தேசிய மனநல மையங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
புது டெல்லி:

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:-

கொரோனா பெருந்தொற்று எல்லா வயதினருக்கும் மனநலப் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது. இதை சரி செய்வதற்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும். 

இதற்காக நோடல் மையம் மற்றும் பெங்களூர் ஐஐடியின் தொழில்நுட்ப உதவியுடன் 23 தேசிய மனநல மையங்கள் அமைக்கப்படும்.

112 மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம், சுகாதார மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Tags:    

Similar News