இந்தியா
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்: பாராளுமன்றம் வந்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Published On 2022-02-01 10:32 IST   |   Update On 2022-02-01 10:32:00 IST
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவரங்கள் அடங்கிய டெப்லெட் உடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துவிட்டு பாராளுமன்றம் வந்தார்.
புதுடெல்லி:

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் பாராளுமன்றம் வந்துள்ளார்.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படுமா?, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்திய பட்ஜெட் குறித்து எழுந்துள்ளன. 

முன்னதாக, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவரங்கள் அடங்கிய டெப்லெட் (Tablet) உடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். 

மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

Similar News