இந்தியா
தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
நாடு முழுவதும் 23 பசுமை வழிச்சாலை திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளன. டெல்லி முதல் மும்பை வரையிலான எக்ஸ்பிரஸ் வே திட்டம் விரைவில் நிறைவடையும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
இந்தியா தனது 75-வது சுதந்திரதின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் வணக்கங்கள். வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரித்ததால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
ஒரு வருடத்துக்குள் 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது. உலகிற்கு ஏராளமான மருந்து பொருட்களை இந்தியா கொடுத்து உதவி இருக்கிறது.
சமுதாயத்தில் சமநிலை இருக்க வேண்டும் என அம்பேத்கரின் எண்ணத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது.
கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவீதம் உயர்ந்துள்ளது.
பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் சரியான காலத்தில் வழங்கப்பட்டது.
மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியை வழங்கியுள்ளது. சிறு விவசாயிகளுக்கு உதவுவதுதான் மத்திய அரசின் திட்டங்களின் நோக்கமாகும். சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக’’ என்ற குறளின்படி பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம் பெண்கள் முன்னேற வழிவகை செய்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களை சந்தித்து வந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் பயிற்சிகளை பெற்றுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
‘ஸ்டார்ட் அப்’ திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ‘ஸ்டார்ட் அப்’ திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொழில்நுட்ப உற்பத்தி துறையில் இந்தியா தற்போது உலக அளவில் முதன்மையான இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக சிறு-குறு, நடுத்தர தொழில்கள் இருக்கின்றன. சிறு-குறு தொழில் துறையினர் சரியான காலத்தில் சரியான நிதிகளை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்கிறது.
அலைபேசி உருவாக்கும் முக்கியமான மையங்களில் இந்தியாவும் உலகளாவிய அளவில் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் 13 லட்சம் சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளன.
உள்நாட்டு கட்டமைப்பு மேம்படுத்துதலை முழு அளவில் செயல்படுத்தி வருவதால் அனைத்து துறைகளும் வேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன. கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் 23 பசுமை வழிச்சாலை திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளன. டெல்லி முதல் மும்பை வரையிலான எக்ஸ்பிரஸ் வே திட்டம் விரைவில் நிறைவடையும். கடந்த ஓராண்டில் மட்டும் 33 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன.
ஆளில்லா ரெயில்வே சேவையை மேற்கொள்ளும் திட்டங்கள் விரைவாக நடைபெற்று வருகிறது.
நாட்டிலேயே மிகப்பெரிய பசுமை வழி விமான நிலையம் நொய்டாவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் ஏராளமான புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் சுயசார்பு முறையில் செயல்படுவதை அரசு உறுதி செய்து வருகிறது.
‘டிரோன்’ தொழில் நுட்பத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிலாளர் மற்றும் வங்கிகள் சார்ந்த விதிகள் சீர்படுத்தப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிகள் செய்துள்ளதாக ஐ.நா. பாராட்டி உள்ளது.
சூரிய ஒளி மின்சக்தியை அதிக அளவில் பயன்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை மேம்படுத்துவதற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மேம்படுத்துவதற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அருணாச்சலபிரதேசத்தின் இட்டா நகரில் விரைவில் புதிய விமான நிலையம் தொடங்கப்பட இருக்கிறது. நக்சல் பாதிப்புகள் அதிகம் இருந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதில் புதிய சகாப்தம் தொடங்கி இருக்கிறது.
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டு இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ல் இருந்து 70 ஆக குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெயில் மற்றும் விமான இணைப்புகளை அதிக அளவில் செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.