இந்தியா
இந்தியாவில் நுழைந்து 2 ஆண்டுகள் முடிந்தது: கொரோனாவுக்கு எதிரான போர் முடிவில்லாமல் தொடர்கிறது
இந்தியாவில் கொரோனா நுழைந்து 2 ஆண்டுகள் ஆகி உள்ளது. கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என தெரியாத நிலையில் அதற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.
புதுடெல்லி :
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது.
2020-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி, உகான் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து, கேரளாவுக்கு பருவ விடுமுறையில் திரும்பிய மாணவி மூலம் இந்தியாவில் இந்த தொற்று நோய் அடியெடுத்து வைத்தது.
தற்போது கொரோனா இந்தியாவில் நுழைந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவத்தொடங்கியது.
இதுவரை நாடு 3 அலைகளை கண்டுள்ளது. பல உருமாறிய வைரஸ்களை சந்தித்துள்ளது. அவற்றில் பல ஆபத்தானவை.
இந்தியாவில் இதுவரை 4 கோடியே 10 லட்சத்து 92 ஆயிரத்து 522 பேருக்கு இந்த தொற்று பாதித்துள்ளது. 4 லட்சத்து 94 ஆயிரத்து 91 பேர் இறந்துள்ளனர்.
சார்ஸ்கோவ்-2 பற்றிய ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பான இன்சாகோக் தகவல்படி, இந்தியாவில் 2 ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய வைரஸ்கள் 7 ஆகும். அவை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, பி.1.617.1 மற்றும் பி.1.617.3 மற்றும் ஏ.ஒய்.தொடர் மற்றும் ஒமைக்ரான் ஆகும்.
டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ்கள், மிகவும் அபாயகரமானவை. டெல்டா, இந்தியாவில் 2-வது அலையையும், ஒமைக்ரான் 3-வது அலையையும் தூண்டின.
மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த 2-ந் தேதி வரை 1.5 லட்சம் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தி உள்ளதாகவும், அவற்றில் 71 ஆயிரத்து 428 உருமாறிய கொரோனா பாதிப்புகள் எனவும் தெரிவித்துள்ளார்.
71 ஆயிரத்து 428 பாதிப்புகள் கவலைக்குரிய வைரஸ் வகையை சேர்ந்தவை. 67 ஆயிரத்து 700 மாதிரிகள் சமூகத்தொற்று. 3,728 தொற்று பாதிப்புகள் வெளிநாட்டு தொடர்பு மூலம் வந்தவை.
71 ஆயிரத்து 428 மாதிரிகளில், டெல்டா 41 ஆயிரத்து 220-ல் காணப்பட்டன. 17 ஆயிரத்து 114 ஏ.ஒய். பாதிப்புகள் ஆகும்.
தற்போது பெரும்பாலான பெருநகரங்களிலும், நகரங்களிலும் டெல்டா வைரஸ் இடத்துக்கு ஒமைக்ரான் வந்துள்ளது.
எந்த வகை கொரோனா வைரஸ் என பொருட்படுத்தாமல் சோதனை, தடம், சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் ஆகியவற்றைத் தொடர வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார்.
பொது சுகாதார வல்லுனர்களும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதும், தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதும்தான் கொரோனா மாறுபாடுகளுக்கு எதிரான சிறந்த தீர்வு என்று வலியுறுத்துகின்றனர்.
ஆனால் கொரோனா இந்தியாவில் எப்போது உள்ளூர் தொற்றாக மாறும் என்பதில் தெளிவில்லை. கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என தெரியாத நிலையில் அதற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.
இந்தியாவில் உள்ளூர் தொற்றாக மாறினாலும், வைரஸ் கவலைக்குரியதாக இருக்காது என்று அர்த்தம் அல்ல என்று உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரவால் சிங் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான், "கொரோனாவின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற தெரியவில்லை. நாம் என்ன எதிர்பார்ப்பது என்பது நல்ல பதில் இல்லாத கேள்வி. தொற்று நோய் முன்னேறுவதை பார்ப்போம்" என்று கூறி உள்ளார்.