இந்தியா
இந்திய பெண்ணுடன் வங்காளதேச தூதரக அதிகாரி செக்ஸ் உரையாடல் - 24 மணி நேரத்தில் நாடு திரும்பினார்
இந்திய பெண்ணுடன் செக்ஸ் உரையாடலில் ஈடுபட்ட வங்காளதேச தூதரக அதிகாரியை 24 மணி நேரத்தில் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவி செயலாளர் மஹ்முதுல் ஹக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வங்காளதேசத்தின் துணை தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு முதன்மை செயலாளராக (அரசியல்) முகமது சனியூல் காதர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முகமது சனியூல் காதர் இந்திய பெண்ணுடன் செக்ஸ் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் உரையாடல் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மீது துணை உயர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய பெண்ணுடன் வெளிப்படையான பாலியல் அரட்டையில் தூதரக அதிகாரி ஒருவர் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து வங்காள தேச வெளியுறவுத்துறை அமைச்சகம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. 24 மணி நேரத்தில் தூதரக அதிகாரி முகமது சனியூல் காதர் கொல்கத்தாவை விட்டு வெளியேறி நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டது.
வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவி செயலாளர் மஹ்முதுல் ஹக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து அவரும் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாசில் உள்ள பெட்ரோபோல் - பெனாபோல் எல்லை வழியாக வங்காள தேசத்துக்கு சென்றார்.
காலை 11.40 மணி அளவில் முகமது சனியூல் காதர் எல்லையை தாண்டியதாக அங்குள்ள எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.