இந்தியா
எம்.ஜி.ஆர் - பிரதமர் மோடி

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்- பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

Update: 2022-01-17 05:10 GMT
தமிழகம் முழுவதும் இன்று எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை:

முன்னாள் முதல்வர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் உருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்த்து செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.  அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும்  அனைவராலும் போற்றப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News