இந்தியா
மகேந்திரநாத் பாண்டே

மத்திய மந்திரி மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா

Published On 2022-01-04 11:46 IST   |   Update On 2022-01-04 11:46:00 IST
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள மகேந்திர நாத் பாண்டே வலியுறுத்தியுள்ளார்.
புது டெல்லி:

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் தினசரி பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் தற்போது மத்திய கனரக தொழில்துறை மந்திரி மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகேந்திர நாத் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு மகேந்திர நாத் பாண்டே கூறினார்.

Similar News