இந்தியா
கோப்பு புகைப்படம்

ஒமைக்ரான் அபாயம்: தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு

Published On 2021-12-25 11:55 IST   |   Update On 2021-12-25 12:02:00 IST
ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் அல்லது தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ளதாக அறியப்படும் மாநிலங்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்யும்.
புது டெல்லி:

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளை வலியுறுத்தியது. மேலும் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் தற்போது 10 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழுவை அனுப்ப சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த குழு ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பதாக அல்லது தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ளதாக அறியப்படும் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

Similar News