செய்திகள்
சரண்ஜித் சிங் சன்னி

10- ஆம் வகுப்பு வரை பஞ்சாபி மொழி கட்டாயம்: பஞ்சாப் முதல் மந்திரி அதிரடி

Published On 2021-11-12 12:11 GMT   |   Update On 2021-11-12 12:11 GMT
பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி கூறியுள்ளார்.
சண்டிகார்:

பஞ்சாபில் 10-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாம் என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உத்தரவிட்டுள்ளார். தாய்மொழியை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாபி மொழி தொடர்பாக இரு மசோதாக்கள் நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இது குறித்து சரண் ஜித் சிங் சன்னி கூறியிருப்பதாவது;- பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கப்படுகிறது. 



இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், அலுவலகங்களிலும் பஞ்சாபி கட்டாய மொழியாக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்” எனக்கூறியுள்ளார்.

Tags:    

Similar News